உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக போராட உதவ முன் வருபவர்களுக்கு ஆயுதங்கள் தருகின்றோம்” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.
மேலும் தாம் உக்ரைன் தலைநகரில் உள்ளதாகவும்,நாட்டிற்கு எதிராக பேராடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் தொடரும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் தலைநகரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் தலைநகர் கீவில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.