உக்ரைனில் தொடர்ந்து நான்காவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க முன்வந்துள்ளது ஜேர்மனி.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது, பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் போரிட்டு வருகின்றனர்.
தலைநகர் கிவ் பகுதியை ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், அதிகாரிகளின் முன்னறிவிப்பு ஏதுமின்றி எல்லைகளுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயிரம் டாங்கி எதிர்ப்பு கருவிகளும், 500 ஏவுகணைகளும் வழங்கப்படும் என ஜேர்மனி சான்சிலர் ஒலாப் ஷோல்ஸ் கூறியுள்ளார்.
இதேபோன்று 50 டாங்கி எதிர்ப்பு கருவிகளையும், 400 ஏவுகணைகளையும் வழங்க நெதர்லாந்து ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 350 மில்லியன் டொலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை உக்ரைனைக்கு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் 9.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பவும், இயந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் அவைகளுக்கு தேவையான குண்டுகள் அனுப்பிவைக்கப்படும் என செக் பிரதமர் பெத்ரோ ஃபியாலா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.