நாட்டை பாதுகாக்க உக்ரைனில் எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள் பலரும் இணைந்துள்ளது அவர்களின் துணிச்சலையும் தேசப்பற்றையும் பறைச்சாற்றுவதாக அமைந்துள்ளது.
உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா நான்காம் நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க பாதுகாப்பு படையில் உக்ரைன் பொதுமக்களும் இணைகின்றனர்.
அந்த வகையில் நாட்டை பாதுகாக்க உக்ரைனில் எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள் பலர் இணைகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் பாதுகாப்பு படையில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல துறைகளை சேர்ந்த பெண்கள் துணிச்சலுடன் இதில் இணைகிறார்கள்.
அதன்படி ஆசிரியை, மனோதத்துவ நிபுணர்கள் என பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்கள் நாட்டுக்காக களம் காண்கின்றனர்.