கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் அக்டோபர் 29-ம் தேதி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இவரின் மறைவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது தளபதி விஜய் தற்போது பெங்களூருவில் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தளபதி விஜய் அவர்கள் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.



















