யாழ். தென்மராட்சி – நாவற்குழி மற்றும் கெற்பேலி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நாவற்குழி ப.நோ.கூ சங்க மண்டபத்திற்கு முன்னால் இடம்பெற்ற சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் கைத்தடியைச் சேர்ந்த ரத்தினகுமார் சுவின்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இதேவேளை கெற்பேலி மத்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மிருசுவிலை சேர்ந்த இராசதுரை கோணேஸ்வரன் (வயது36) என்பவர் தலையில் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.