யாழில் பிறந்து 71 நாட்களேயான சிசு ஒன்று நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசி குளத்தை சேர்ந்த காண்டீபன் அஸ்மிகா என்ற சிசுவே இவ்வாரூ உயிரிழந்துள்ளது.
நேற்றுமுன்தினம் பிற்பகல் சிசுவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து சாவகச்சோி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிசு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.



















