தாய்லாந்து சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிடா பட்சரவீரப்போங். தாய்லாந்த் தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். பல சீரியல்களில் நடித்துள்ள நிடாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு நிடா, பாங்காக்கின் நந்தபுரி பகுதியில் உள்ள சாவ் பிரயா ஆற்றில் ஸ்பீட் போட்டில் தனது நண்பர்களுடன் போட்டிங் சென்றார். அப்போது பின் பக்கத்தில் அமர்ந்திருந்த நிடா நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், நிடா ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் நிடா பயணம் செய்த ஸ்பீட் போட் லைசென்ஸ் இல்லாமல் இயங்கியது தெரியவந்தது.
இந்நிலையில் நிடாவின் தாயார் தனது மகள் ஆற்றில் விழுந்து உயிரிழந்தது விபத்து அல்ல என பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். நிடா கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார். அவரது புகாரை தொடர்ந்து போலீசார் நடிகை நிடாவுடன் போட்டிங் சென்ற 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




















