போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த இரு நாட்டு பிரதிநிதிகளும் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ரஷ்யா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னதாக ஆலோசனைக்காகத் திரும்புவதாகவும் இரு நாட்டு பிரதிநிதிகளும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




















