கொழும்பு – வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவை ஆரம்பிக்கபடவுள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையிலிருந்து இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி ரயில் புறப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ஞாயிற்று கிழமையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்க கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் எனவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் இந்த ரயிலில் 530 பயணிகள் பயணிக்க முடியும் என கூறப்படும் நிலையில், மிக விரைவில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



















