சூப்பர் சிங்கர் சீசன் 8-ல் இருந்து மா.கா.பாவை தூக்கி விட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு தொகுப்பாளரை களமிறக்கி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
விஜய் டிவியில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 8-ல் மா.கா.பாவுடன் மைனா நந்தினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நுழைந்ததால், மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார்.
ஆனால் அடுத்த சில நாட்களில், பிரியங்கா தனது பிக்பாஸ் நண்பர்களுடன் அவுட்டிங் சென்றதால், மீண்டும் மைனா நந்தினியே மா.கா.பா ஆனந்துடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
மீண்டும் பிரியங்கா என்ட்ரி
தற்போது மீண்டும் பிரியங்கா நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆனால், நிகழ்ச்சியில் இருந்து மைனா நந்தினி மற்றும் மா.கா.பா. ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதில் தற்போது மா.கா.பாவுக்கு பதிலாக கலக்கப்போவது யார் குரோஷி சூப்பர் சிங்கர் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
விஜய் டிவியில் இதுவரை இப்படி ஒரு குளறுபடி நடக்காத போது தற்போது இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், இது குறித்து விஜய் டிவி தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.




















