ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பைனான்சியல் டைம்ஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களின் செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.
உக்ரைனில் பயன்படுத்துவதற்காகவே இராணுவ உபகரணங்களை, மொஸ்கோ, பீஜிங்கிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததில் இருந்து ரஸ்;யா, சீனாவிடம் உதவிகளை கோரி வருகிறது
எனினும் எந்தவகையான உதவிகளை ரஸ்யா கோரி வருகிறது என்பதை குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில் ரஸ்யாவின் கோரிக்கையை ஏற்று, சீனா உதவி செய்யத் தயாராகி வரலாம் என்ற அறிகுறிகள் தென்படுவதாக செய்திகளில் குறிப்;பிடப்பட்டுள்ளது.