கொரோனா வைரஸ் மீண்டும் சீனாவில் ஆட்டத்தை அரம்பித்ததால் அங்கு பல கட்டுப்பாடுகளை மீண்டும் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அங்குள்ள 19 மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகரித்து இருக்கிறது. புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும், ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள ஷென்சென் மற்றும் அதனையொட்டி உள்ள தெற்கு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், அங்கு 1.7 கோடி மக்கள் வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள மக்கள் அன்றாட தேவைக்கு திணற ஆரம்பித்துள்ளனர்.