சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மட்டும் போதுமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவது மட்டும் போதுமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களை சந்தித்த போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அரசாங்கம் காலம் தாழ்த்தியேனும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள எடுத்த தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக வேறு நாடுகளினதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.