ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை காரணமாக உணவகங்களில் பால் தேநீர் விநியோகம் இடைநிறுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்நாட்டு பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பால் மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.