“ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவர்தான் இருக்கின்றார். அந்தக் கட்சியால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, அந்தக் கட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் எம்முடன் இணைவதே மேலானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“ஐக்கிய தேசியக் கட்சி என்பது எமது தாய்க்கட்சி. அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் எம்முடன்தான் இருக்கின்றனர். அந்தக் கட்சியை நாம் மறக்கமாட்டோம்.ஆனால், அந்தக் கட்சியின் அரசியல் கட்டமைப்பில் தற்போது ஒருவர்தான் இருக்கின்றார்.
எனவே, அந்தக் கட்டமைப்பால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எம்மால்தான் அது முடியும். எனவே, எம்முடன் கூட்டணி அமைப்பதுதான் ஆரோக்கியமான விடயமாக அமையும்” – என்றார்.