உடல் நலக்குறைவு காரணமாக சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அடுத்த வைல்டு கார்டு என்ட்ரியை அதிரடியாக இறக்கியுள்ளனர்.
வெறும் 70 நாள் நிகழ்ச்சிக்கு இன்னொரு வைல்டு கார்டு என்ட்ரியா என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
இப்போ வந்திருப்பவர் நிச்சயம் காமெடிக்கு கியாரண்டி கொடுப்பார். வேறு யாரும் இல்லை நம்ம கேபிஒய் தீனா தான்.
பிக் பாஸ் அல்டிமேட்டில் தீனா
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய தீனா, விஜய் டிவியின் பல நிகழ்ச்சியில் பிராங் காலராகவும் பட்டையை கிளப்பினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் அசத்தினார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அடகுக் கடைக்காரராக வாய்ஸ் கொடுத்து வந்த அவரை உள்ளே பிடித்து போட்டுள்ளனர்.
உள்ளே வந்த தீனா சதீஷை மாக் செய்து தனது காமெடியை ஆரம்பித்து இருக்கிறார் . 53வது நாள் ஆகியுள்ள நிலையில், இன்னுமொரு 17 நாட்கள் நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகுது? யார் வெற்றி பெறப் போகிறார் என ரசிகர்கள் ஒரே ஆர்வமாக உள்ளனர்.




















