கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்முறையாக டிக்டாக், ஷேர் இட், யூ.சி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
இந்திய அரசு இதுவரை 320 செயலிகளை தடை செய்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள செயலிகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி சோம் பிரகாஷ் கூறியதாவது:-
அனைவருக்கும் பாதுகாப்பான, நம்பிக்கையான இணையத்தை வழங்க, ஐடி சட்டம் 2000, 69ஏ பிரிவின் கீழ் 320 மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதில் அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தவை. சீனா கடந்த 2000 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை வெறும் 250 கோடி டாலர் வரை மட்டுமே இந்தியாவில் நேரடி முதலீடு செய்துள்ளது. இந்தியாவிற்கு கிடைத்துள்ள அந்நிய முதலீட்டில் வெறும் 0.43 சதவீதம் மட்டுமே சீனாவுடையது. இதனால் இந்திய பொருளாதாரத்திற்கு எதுவும் பாதிப்பு இல்லை.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்முறையாக டிக்டாக், ஷேர் இட், யூ.சி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதன்பின் பப்ஜி உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் இந்தியா 49 சீன செயலிகளை தடை செய்தது. இந்த செயலிகள் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட செயலிகளின் போலி வடிவங்கள் தான்.