மொரவக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
போருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப வன்முறை தொடர்பில் மொரவக்க காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி குறித்த பெண் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் சுகவீனமடைந்துள்ளார்.
பின்னர் அம்பியூலன்ஸ் மூலம் மொரவக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.