பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கை கோரியுள்ளது.
இக்கடன் உதவிக்கான கோரிக்கையை இலங்கை முன்வைத்துள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இந்த கோரிக்கையை பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் இன்று ஆரம்பமான பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் தற்போது இலங்கை வந்துள்ளார்.