நாட்டில் ஏற்படும் தொடர் மின்தடை காரணமாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மின் ஒட்டுத்தொழிலாளர்கள் மற்றும் குளிர்பான விற்பனையாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில்,
”தையல் தொழிலை நம்பியே எமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது தொடர்ச்சியாக மின்தடை காரணமாக தமது தையல் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் மின்சாரம் அற்ற தையல் இயந்திரத்தின் மூலமாக தையல் தொழிலை மேற்கொண்ட போதிலும் தற்போது மின்சாரத்தினை பயன்படுத்துகின்ற தையல் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலமாக கூடிய வருமானம் பெறக்கூடிய நிலை இருந்து வந்தது.



















