நாட்டில் குறைந்த அளவில் வருமானம் பெற்று வரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்த் குமார் இது தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார் என தெரிவித்துள்ளார்.
மேலும் பணமாகவோ அல்லது பொருளாகவோ நிவாரணம் வழங்குவதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்தார்



















