பொறுத்தது போதும்” என பிரபல கிரிக்கெட் வீரரும், புகழ்பூத்த சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தர் ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தகுதியற்ற அதிகார பேராசை கொண்ட ஆட்சியாளர்களினால் இந்த நாடு பாரியளவு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது என்பதனை கனத்த இதயத்துடன் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
தேசப்பற்றாளர்கள் என பிரச்சாரம் செய்து வரும் அரசியல் தலைவர்களை விடவும் தாம் இந்த நாட்டை நேசிப்பதாகவும் பற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில், மதம், இனம், அரசியல் கட்சிகள், நம்பிக்கைகள் என்ற அடிப்படையில் பிளவடையாது இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பொறுத்தது போதும் என்பதனை உரக்க சொல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழகிய தாய் நாட்டை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம் என ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார்.