நாடு முழுவதும் வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆளும் கட்சிக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்புக்காக முழு நாட்டிலும் வார இறுதி ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை கருதுகிறது.
எனினும், அந்தக் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.