நாம் ஓடி ஓடி உழைத்தாலும் பணம் தங்கவே தங்காது. உழைப்புக்கு ஏற்ற செலவு எங்காவது வந்து கொண்டே இருக்கும்.
சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன.
அவற்றை பணப்பையில் வைத்திருப்பதால் பணம் தங்கும் என நம்பப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த பொருட்களில் ஒன்றை பர்ஸில் வையுங்கள்
தாமரையின் விதையை பர்ஸில் வைத்துக்கொண்டால் பணம் தங்கும்.
பச்சை நிற பர்ஸ் வைத்திருப்பது மிகவும் நல்லது.
உங்கள் பர்ஸில் ஒரு சிறிய ஸ்ரீ யந்திரத்தை வைத்திருப்பதன் மூலம், உங்களிடம் நேர்மறை ஆற்றல் இருக்கும். இது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
பர்ஸையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
பர்ஸில் 7 கோமதி சக்கரங்களை வைத்திருப்பது செல்வம் தரும். இதனால் உங்களுக்கு பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்படாது.
ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது.
இதை மட்டும் ஒரு போதும் செய்யாதீர்கள்
ரூபாய் நோட்டுக்களை சுருட்டியோ அல்லது இஷ்டத்திற்கு மடித்தோ வைத்தால், மஹாலட்சுமிக்கு பிடிக்காது.
அந்த பர்ஸை பார்த்தாலே காத தூரத்திற்கு ஓட்டம் எடுப்பாள்.
அதற்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் தான் மஹாலட்சுமியும் நம்முடைய பர்ஸில் நிரந்தரமாக குடியேறுவாள்.
பர்ஸ் தோலினால் ஆன பர்ஸாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
லெதர் பர்ஸில் சில பொருட்களை வைத்தால் அன்னை லட்சுமிக்கு கோபம் வரும் என சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.