ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
இந்த குழுவில் சுமார் 13 பேர் உள்ளடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“சர்வகட்சி” அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி இந்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (21) காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக கடிதத்தில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.