காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித் பொலிஸ் சார்ஜண்ட் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
போராட்ட களத்துக்கு சீருடையுடன்சென்று அதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜண்ட் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குட்டிகல காவல்நிலையத்தில் பணியாற்றிவந்த சார்ஜன்ட் டப்ளியூ.எம்.அமரதாசவை (30158) என்ற குறித்த அதிகாரி கடந்த 14 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றிருந்தார்.
இதுதொடர்பில் அவர் அன்றைய தினம் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார்.
இதனையடுத்து, மறுநாள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.