தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.
தனியார் எரிபொருள் பௌசர் இன்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் அமைச்சரின் உத்தரவு வெளியாகி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபடவுள்ள தனியார் உரிமையாளர்களின் அனுமதியை ரத்து செய்து புதிய வழங்குனர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில்கள், அரசுக்கு சொந்தமான பௌசர்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான பௌசர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தனியார் வாடகை பௌசர்கள் மூலம் சேவைகள் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.