தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
வலையொளி சேவை ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டோம். அந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்காக 4 பிக்குகள் ஒன்றாக இணைந்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவியிலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால் அனைத்து அரசியல்வாதிகளும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.