அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் போராட்டக்காரர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு வலது காலில் இரண்டு எலும்புகளும் உடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திடீரென மோட்டார் சைக்கிளில் வேகமாக வரும் குழுக்களினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.