எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்படக்கூடும் என கொழும்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்தத் துறையலில் ஏற்கனவே பலர் வேலை இழந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சமிந்த விதானகமகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, சந்தை செயல்முறை நாளுக்கு நாள் நிறுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி, வேலை வாய்ப்பு சந்தையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
தனியார் துறையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறைகளில் ஆடைத் துறையும் ஒன்று என்பதை நாம் அறிவோம்.
ஆடைத் தொழிலை எடுத்துக் கொண்டால் சுமார் மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் இன்னும் இரண்டு மாதங்களில், அவர்களும் பெரும் ஆபத்தில் உள்ளனர். அது மாத்திரமின்றி கட்டுமானத் துறையில் கடுமையான பாதிப்பு ஏற்டப்டுள்ளது.
தினசரி விலைவாசி உயர்வால், கட்டுமானத் துறையில், சுமார் பத்து லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளனர். இந்த பகுதிகளில் கடுமையான அவதானம் செலுத்த வேண்டும்.
சமகாலத்தில் அரசாங்கம் என்று ஒன்று இல்லை, அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இதனால் மக்கள் வீதிக்கு இறங்கி வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சிகளிடமும் எந்த திட்டமும் இல்லை.
“பணம் அச்சடிக்கப்பட்ட போது நாட்டில் பணவீக்கம் ஏற்படாது என கூறினார்கள். ஆனால் இன்று நாடு இன்று பணவீக்கத்தை எதிர்கொள்கின்றதென பார்கக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என கொழும்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சமிந்த விதானகமகே மேலும் தெரிவித்துள்ளார்.