கிளிநொச்சி – பூநகரி, வேரவில் பிரதேசத்தில் 130 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலிற்கு அமைவாக இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி இலங்கை மதிப்பில் 2.5 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொதிகள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.