மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வசிக்கும் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நேற்றையதினம் (01) திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேச சபையின் உறுப்பினரது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், அவரது வீட்டினை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் எரிவாயு கொள்கலன், கிரைன்டர், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வங்கி தானியங்கி இயந்திர அட்டை (ATM அட்டை) என்பற்றினை களவாடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















