இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியானது 370 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஏனைய வங்கிகளில் 359 ரூபா தொடக்கம் 366 ரூபா வரையிலான பெறுமதி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வங்கி – 366.00 ரூபா
மக்கள் வங்கி – 359.99 ரூபா
சம்பத் வங்கி – 370.00 ரூபா
கொமர்ஷல் வங்கி – 370.00 ரூபா
NDB வங்கி – 370.00 ரூபா
அமானா வங்கி – 360.00 ரூபா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை அடுத்து இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியானது தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியானது 350 ரூபாவை தொட்டிருந்த நிலையில் தற்போது 400 ரூபாவை நெருங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.