1990 சுவா செரிய, இலவச நோயாளர் காவு வண்டியின் சேவையின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நிதியை ஒதுக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஹர்ஷ டி சில்வா அவசர நோயாளர் காவு வண்டி சேவையை நடத்துவதற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்குமாறு வலியுறுத்தி தனிப்பட்ட முறையீடு ஒன்றை விடுத்துள்ளார்.
1990 சுவா செரிய நோயாளர் காவு வண்டி சேவை இலங்கையில் செயற்படுவதற்கு நிதி இல்லாமல் போனதாக அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
1990 சுவா செரிய அறக்கட்டளை 2018 இல் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. இவ் இலவச நோயாளர் காவு வண்டி சேவையானது இலங்கையில் 5 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.