தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என சொல்லி பல நடிகர்களின் அந்தரங்க மற்றும் யாரும் கேள்விப்படாத விஷயங்கள் பலவற்றையும் பேட்டிகளில் கூறி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
இவர் பத்திரிகையாளர் மட்டுமின்றி காமெடி ரோல்களில் பல படங்களில் நடித்து இருக்கிறார். பயில்வானின் பேட்டிகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற இந்த நேரத்தில் அவர் மீது தமிழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்த தயாரிப்பாளர் கே.ராஜன் புகார் அளித்து இருக்கிறார்.
சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில் “பயில்வான் ரங்கநாதன் பொய்யான செய்திகளை ஆபாசமாகவும் தரக்குறைவாகும் பேசி வருகிறார், அதனால் பல திரைப்பட நடிகர் நடிகைகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.”
“சமீபத்திய பேட்டியில் என்னை யாரும் தாக்க முடியாது, அப்படி தாக்க வந்தால் அரிவாளால் அறுத்து விடுவேன் என பயில்வான் மிரட்டி இருக்கிறார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுகிறது. அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் குறிப்பிட்டுஇருக்கின்றனர்.
இந்த வழக்கில் பயில்வான் கைதாவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.