விஜய் படத்தின் வசூலை முறியடித்த KGF 2
பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு திரைப்படங்களான KGF 2 மற்றும் பீஸ்ட் அடுத்த நாட்களில் தமிழகத்தில் வெளியானது.
இதில் பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது, இதனால் இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்த தவறியது.
ஆனால் KGF 2 திரைப்படம் இந்தியளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது மட்டுமின்றி தமிழக மக்களிடையேயும் பெரிய வரவேற்ப்பை பெற்றது.
இதனால் விஜய்யின் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு KGF 2 திரைப்படத்தை நிறைய திரையரங்கில் திரையிட்டனர்.
இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படம் தமிழகம் முழுவதும் 25 நாட்களில் ரூ. 115 கோடி வரையில் வசூல் செய்திருக்கிறது. மேலும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இதைவிட குறைவாகவே தமிழகத்தில் வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.