விஜய் சேதுபதி, நயன்தரா, சமந்தா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் காத்துவாக்குல இரண்டு காதல்.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், வசூல் ரீதியாக மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
விஜய் சேதுபதி திரைப்பயணத்திலே அதிகம் வசூல் செய்த படமாக காத்துவாக்குல இரண்டு காதல் அமைந்துள்ளது.
ஆம், தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 36 கோடி வசூலை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் ரூ 56 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக தமிழகத்தில் ரூ 40 கோடி வசூலை இப்படம் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.