கத்தி முனையைவிடவும் பேனா முனை பெரிது. கத்தி முனை சாதிக்காததை உலகின் பல்வேறு பகுதிகளில் பேனா முனை சாதித்திருக்கிறது. அதற்கு வரலாறே சாட்சி.
இந்தச் சூழலில் உலகிலேயே மிகப்பெரிய பேனா ஒன்று ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸா என்பவரும் அவரத் குழுவினரும் சேர்ந்து மிகப்பெரிய பால் பாயிண்ட் பேனாவை சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்தனர். தற்போது அப்பேனாவுக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தப் பேனா வெறும் காட்சிக்காக மட்டுமில்லாமல் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பேனாவை வைத்து ஒருவரால் எழுத முடியாது. இதில் எழுதுவதற்கு 6 பேர் துணை வேண்டும். ஏனெனில் இது 5 அடி அல்லது 18 அடியும், 37 கிலோ எடையும் கொண்டிருக்கிறது.
கின்னஸ் அமைப்பு சார்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பேனா தொடர்பான வீடியோவில், ஸ்ரீநிவாஸா உள்ளிட்ட 5 பேர் பேனாவை தூக்கி சென்று பெரிய காகிதத்தில் எழுதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.