இலங்கையின் எரிசக்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த ஒரு வாரக்காலமாக கொழும்புக்கு அப்பால் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் பணம் செலுத்தத் தவறியதன் காரணமாகவே இந்த மசகு எண்ணெய் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பலுக்கான பணத்தொகையை செலுத்தினால் எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினை ஓரளவுக்கு தணியும் என்று நம்பப்படுகிறது.
இதனையடுத்து அதனை விடுவிப்பதற்கான டொலர்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.