நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராக முதலில் தன்னை அடையாளப்படுத்தியவர். அதன்பின் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரம் எடுத்தார்.
தனது வொன்டர்பார் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார், கடைசியாக மாரி 2 படத்தை தான் தயாரித்தார்.
பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள்.
அதோடு படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் பல சாதனைகளை செய்தது.
ஹேக் செய்யப்பட்ட ரவுடி பேபி
இப்பாடல் யூடியூபில் 1.35 +B பார்வையாளர்களை பெற்று சாதனை லிஸ்டில் இருந்தது. ஆனால் தற்போது பாடலை யூடியூபில் சிலர் ஹேக் செய்துள்ளனர். அதைப்பார்த்த ரசிகர்கள் யாருடா அது என செம கோபத்தில் உள்ளார்கள்.



















