விஜய் தொலைக்காட்சியில் எப்போதும் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக காட்டப்படும். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை பெரிய அளவில் புரொமோட் செய்வார்கள்.
அப்படி அவர்களது தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பாக இருக்கிறது.
விக்ரம் ஆடியோ
தீவிர கமல் ரசிகராக இருந்து இப்போது அவரையே படம் இயக்கும வாய்ப்பு லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்துள்ளது. அவர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற நடிப்பில் நல்ல திறமையுள்ள நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.
தற்போது அந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.



















