மலையக பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு பின் லிற்றோ எரிவாயு இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன் மக்கள் வெற்று எரிவாயு கொள்கலன்களை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் இன்று(21) அதிகாலை மூன்று மணிமுதல் காத்திருந்தனர்.
ஹட்டன் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையம் ஒன்றில் வரிசையில் வைக்கப்பட்டிருந்த வெற்று எரிவாயு கொள்கலன்களை ஒழுங்கு முறையில் மாற்றம் செய்யப்பட்டதனால் அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் பாவனையாளர்களுக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளதைத்தொடர்ந்து பொலிஸாரின் தலையீட்டால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் மலையகப்பகுதிளில் ஒவ்வொரு எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்னாலும் சுமார் 200 இற்கும் 300 இற்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள காத்திருந்தனர்.
இன்றைய தினம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதைத்தொடர்ந்து வர்த்தக நிலையங்களுக்கு 80ல் இருந்து150 எரிவாயு கொள்கலன்களை எரிவாயு நிலையத்தில் இருந்து பெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.