உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை உயரும் போக்கை காட்டுகின்றது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,846 டொலராக பதிவாகியுள்ளது.
சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது தங்கத்தின் விலை உயர்வது ஒரு பொதுவான நிகழ்வாகும்.
இதேவேளை, இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 186,750 ரூபாவாக உள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,250 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 163,450 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.