இலங்கையின் மீளச்செலுத்தவுள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்க பிரான்ஸிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற MS Lazard (https://www.lazard.com) நிறுவனமே இவ்வாறு இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது வழங்கப்பட்டுள்ளது.
1848ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போதைக்கு 174 வருட கால நிதி ஆலோசனைகள் சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.