எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரியான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் தலைவராக 2வது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெட்ரோஸ் அதனோமை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் மீண்டும் இந்த அமைப்பின் தலைவராகியுள்துடன், அடுத்த 5 ஆண்டுக்கு அவர் தலைவராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள டெட்ரோஸ் அதனோமுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உலக நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உலக சுகாதார அமைப்பை டெட்ரோஸ் திறம்பட வழிநடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.