இலங்கையின் குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உட்பட மூன்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அஜித் ரோஹன தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும், தென் மாகாணத்தில் இருந்து எம்.டி.ஆர்.எஸ் தமிந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அஜித் ரோஹன உட்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்ற அறிவிப்பு!
கிழக்கு மாகாண பொலிஸ் அதிகாரி
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே சில்வா, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் சேவைத்தேவையின் அடிப்படையில், பொதுச் சேவை ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.