இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75% தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவரின் கூற்றுப்படி, அடுத்த மாதத்திற்குள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.2 மில்லியன் மக்கள் வேலையின்மையை எதிர்கொள்கின்றனர்.
தற்போது 90 சதவீதமான கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
800,000 முதல் 900,000 வரையிலான பணியாளர்கள் கட்டுமானத் துறையின் மூலம் நாட்டிற்கு நேரடியாகப் பங்களிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பல கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.