எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டையும் பயனற்றுப் போயுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முயற்சித்த சமயத்தில் சில மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன், அவர்கள் மீது தாக்குதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறைத்திட்டம்
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான விசேட விடுமுறைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதாரத்துறை ஊழியர்களின் மேலதிக நேரக்கொடுப்பனவில் கடந்த மாதம் வெட்டப்பட்ட தொகையை எதிர்வரும் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.