மத்திய வங்கியின் கடமைகள் சுதந்திரமாக நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்கம் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி வழங்கியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதிக்குழுவின் உறுப்பினர் சஞ்ஜீவ ஜயவர்தன உள்ளிட்டோருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி செயல்முறைகள் பற்றிய விளக்கத்தையும் ஜனாதிபதி கோரினார்.
தொழில்நுட்ப கட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் உடனான பேச்சுவார்த்தைகளின் திருப்திகரமான முன்னேற்றம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு முழு விளக்கத்தை அளித்தார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவாகப் பெறுவதை நோக்கி முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பொருளாதார மீட்சி செயல்முறை தொடர்பாக, நாணய சபையின் ஆதரவுடன், ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதிக்கு விளக்கினார்.
இந்த நடவடிக்கைகளில் ஜனாதிபதி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அத்துடன், மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த பதவியை ஏற்றுக்கொண்டதற்காக மீண்டும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளுநருக்கும் நாணயச் சபைக்கும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியில் தேவைப்படும் எந்தவொரு உதவியும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மு
ழு சுதந்திரம் மற்றும் சுயாட்சிக்கான உறுதிமொழிக்காகவும், தனது நம்பிக்கையை மீட்பதற்காகவும் ஜனாதிபதிக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார்.