யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 11 பரல்களில் எரிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 பரல்களில் மண்ணெண்ணெய், 2 பரல்களில் பெட்ரோல் மற்றும் ஒரு பரல் டீசல் என்பனவே கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
சுன்னாகம் – மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றோடு இணைந்த கடை ஒன்றிலிருந்தே இன்று மாலை இவ்வாறு எரிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள்
பெட்ரோல் ஒரு லீற்றர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மண்ணெண்ணெய் சுமார் ஆயிரத்து 600 லீற்றர், பெட்ரோல் சுமார் 400 லீற்றர் டீசல் சுமார் 200 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளன.